×

வடசென்னையில் அனல்மின் நிலையத்தில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி

சென்னை: மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு, முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 1ம் தேதி 2வது நிலையின் 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, கொதிகலன் பழுது சரிசெய்யப்பட்டு நேற்று மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.

The post வடசென்னையில் அனல்மின் நிலையத்தில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி appeared first on Dinakaran.

Tags : North Chennai ,CHENNAI ,Vada Chennai Thermal Power Station ,Athipat ,Meenjur ,
× RELATED சென்னையில் ஆம்புலன்ஸ் செவிலியரை கடித்த விஷப்பூச்சி!!