×

மக்கள் தொடர்பு முகாம் குறித்த ஆலோசனை கூட்டம்

சேந்தமங்கலம், ஜன.4: கொல்லிமலையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பொன்னுசாமி எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார். கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகளிலும், மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம், தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அப்பன்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொன்னுசாமி எம்எல்ஏ கலந்து கொண்டு பேசுகையில், ‘கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகளிலும், மக்கள் தொடர்பு திட்ட முகாமை நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் ஒவ்வொரு ஊராட்சியிலும், விஏஓ.,க்கள், வருவாய் ஆய்வாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டு, முகாம் நடக்கும் இடம், நாள், நேரம் குறித்து ஒலிபெருக்கி மூலம் விளம்பர வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். பெறப்பட்ட மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும்,’ என்றார். இக்கூட்டத்தில், மண்டல துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post மக்கள் தொடர்பு முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Camp ,Senthamangalam ,Kollimalai ,Relations ,Project ,Ponnusamy ,MLA ,Dinakaran ,
× RELATED அரளிப்பூ விளைச்சல் அமோகம்