×

பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

நாகர்கோவில், ஜன.4: குமரி மாவட்ட கலெக்டர் தர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிப்பதாவது: ஒன்றிய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட தமிழக அரசு உத்தேசித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோரின் அதிகபட்ச ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ₹4000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 9 மற்றும் 10ம் வகுப்பில் பயிலும் மாணவிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சல் வங்கிகளில் தமது பெயரில் வங்கிக்கணக்கு துவங்கி அதனை தமது ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். மேற்படி ஆதார் எண் மற்றும் வங்கி விபரம் தமது வருமானச்சான்று மற்றும் சாதிச்சான்று நகல்களுடன் சம்மந்தப்பட்ட பள்ளித்தலைமையாசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவியர்களது விபரங்களை EMIS (Educational Management Information System) இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Kumari District ,Collector ,dar ,Union Government ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் உணவு, காய்கறி கழிவில் இருந்து எரிவாயு தயாரிப்பு