×

மோடியின் கனவு தமிழ்நாட்டில் நிறைவேறாது: கே.எஸ்.அழகிரி உறுதி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி விழாவில் பிரதமர் மோடி திட்டங்களை துவக்கி வைத்து உரையாற்றும் போது வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள தமிழக மக்களுக்கு துணை நிற்போம் என்று உறுதி வழங்கியிருக்கிறார். வெள்ள சேதத்தை பேரிடராக அறிவித்து தமிழகத்திற்கு நிதி வழங்க பிரதமர் மோடியை நேரிலும், நேற்றைய கூட்டத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். ஒன்றிய குழு வருகை புரிந்து அறிக்கை தாக்கல் செய்ததோடு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தென்மாவட்ட வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்து இதுவரை தமிழகத்திற்கு நிவாரண நிதியாக எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பிரதமரின் பேச்சை எப்படி ஏற்றுக் கொள்வது என்று தெரியவில்லை. பிரதமர் மோடி சாதுர்யமான மேடை பேச்சின் மூலம் மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் திசைதிருப்பி அரசியல் ஆதாயம் தேடலாம் என்று பகல் கனவு காண்கிறார். அவரது கனவு தமிழகத்தில் நிறைவேறாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மோடியின் கனவு தமிழ்நாட்டில் நிறைவேறாது: கே.எஸ்.அழகிரி உறுதி appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,KS Azhagiri ,Chennai ,Congress ,President ,Trichy festival ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் பாஜக அலை...