×

மகளிர் உரிமைதொகை பணிக்காக 323 கூடுதல் அதிகாரிகள் நியமனம்: அரசாணை வெளியீடு

சென்னை: வருவாய் துறை செயலாளர் ராஜாராம் வெளியிட்ட அரசாணை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்கள் கடந்த ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த வருவாய் நீர்வாக ஆணையர் கீழ் 1 பணியிடம் உருவாக்கப்பட்டு, இந்த திட்டத்தின் செயலாக்க அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையர் நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மாதம் ரூ.1000 அவரவர் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்து, 7.35 லட்சம் பேர் இணைக்கப்பட்டனர். நவம்பரிலிருந்து அவர்களுக்கு உரிமைத்தொகை கிடைக்க தொடங்கியது. இன்னும் சிலரது விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. மீதமுள்ள மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளவும், திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும், கூடுதல் அதிகாரிகள் பணியிடங்கள் உருவாக்க நிர்வாக அனுமதி கோரப்பட்டது. இதை கவனமாக பரிசீலித்த அரசு, கூடுதலாக 8 தாசில்தார், 101 துணை தாசில்தார் பணியிடங்களுக்கு ஒப்புதல் வழங்கியது.

அதன்படி கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, தர்மபுரி மாவட்டம் கரிமங்கலம், ஈரோடு மாவட்டம் தாளவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை, கரூர் மாவட்டம் கடவூர், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி,சென்னை மாதவரம் ஆகிய 8 பகுதிகளுக்கு சிறப்பு வட்டாட்சியர்கள், 38 மாவட்ட அலுவலர்கள், 94 துணை வட்டாட்சியர்கள் உள்ளிட்ட 323 பணியிடங்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.2.94 கோடி ஒதுக்கீடு செய்யவும் பேரவையில் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

The post மகளிர் உரிமைதொகை பணிக்காக 323 கூடுதல் அதிகாரிகள் நியமனம்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Rajaram ,
× RELATED சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்டால் நடவடிக்கை