×

ஈரானில் குண்டுவெடிப்பு 103 பேர் பலி: 141 பேர் காயம்

துபாய்: ஈரானில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 103 பேர் பலியானார்கள். 141 பேர் படுகாயம் அடைந்தனர். ஈராக் நாட்டில் பாக்தாத் நகரில் கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் மேஜர் ஜெனரல் காசிம் சுலைமான் கொல்லப்பட்டார். அவரது நான்காவது ஆண்டு நினைவு தினம் நேற்று ஈரானில் அனுசரிக்கப்பட்டது. தலைநகர் தெக்ரானில் இருந்து 820 கிமீ தொலைவில் உள்ள கெர்மானில் உள்ள அவரது கல்லறை அருகே ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் கூட்டத்தில் திடீரென இரண்டு முறைபயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் 103 பேர் உயிரிழந்தனர். மேலும் 141 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பை தீவிரவாத தாக்குதல் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

The post ஈரானில் குண்டுவெடிப்பு 103 பேர் பலி: 141 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Dubai ,Iran ,Major General ,Qasim Sulaiman ,Iranian Army ,United States ,Baghdad ,Iraq ,Dinakaran ,
× RELATED ஈரான் அதிபர் தேர்தலில் 2ம் சுற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பு