×

சென்னையில் நடைபெறும் 47வது புத்தக கண்காட்சி பெரும் வெற்றி அடையட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: 47ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் என்று தெரிவித்தனர் ஆனால் இன்று நந்தனம் YMCA உடற் கல்வியியல் கல்லூரியில் அமைச்சர் உதயநிதி திறந்தது வைத்தார். தவிர்க்க இயலாத காரணங்களால் கண்காட்சியை தொடங்கி வைக்க இயலாததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருந்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து புகழ்பெற்ற நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பாளர்கள், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடும் இலக்கியம், கலை, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், வரலாறு, பொது அறிவு, உணவு, விளையாட்டு, உடல்நலம் போன்ற பல புத்தகங்கள் இங்கு கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்து பயனடைகின்றனர்.

சென்னையில் நடைபெறும் 47வது புத்தக காட்சி பெரும் வெற்றி அடையட்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கும் முதல்வர் நன்றி தெரிவித்தார். கலைஞர் பொற்கிழி விருது, பபாசி விருதுகளை பெற்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தவிர்க்க இயலாத காரணங்களால் கண்காட்சியை தொடங்கி வைக்க இயலாததற்கு வருந்துகிறேன் என்று முதல்வர் கூறியுள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் வர்த்தக மையத்தில் பன்னாட்டு புத்தக கண்காட்சி வரும் 16, 17,18ல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். வர்த்தக மையத்தில் ரூ.6 கோடி செலவில் பன்னாட்டு புத்தக கண்காட்சி நடைபெற இருக்கிறது.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 47-வது சென்னை புத்தகக் காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சுமார் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் இடம்பெறுகின்றன. புத்தகக் காட்சியை பார்வையிட நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கபட்டுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பாண்டுக்கான 47-வது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று (ஜனவரி 3) தொடங்கி ஜனவரி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த புத்தகக் காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரையும், வேலை நாட்களில் மதியம் 2 முதல் இரவு 8.30 மணி வரையும் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

The post சென்னையில் நடைபெறும் 47வது புத்தக கண்காட்சி பெரும் வெற்றி அடையட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : 47th Book Fair ,Chennai ,First Minister ,K. ,Stalin ,47th Chennai Book Fair ,H.E. K. ,Nandana YMCA ,College of Physical Education ,May ,K. Stalin ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...