×
Saravana Stores

கொட்டாவூரில் கனமழை வெள்ளத்தில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்-விவசாயிகள் கவலை

காவேரிப்பட்டணம் : காவேரிப்பட்டணம் ஒன்றியம், பெண்ணேஸ்வரமடம் ஊராட்சி கொட்டாவூர் கிராமத்தில், தென்பெண்ணை ஆற்று நீரை பயன்படுத்தி, வருடம் முழுவதும் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகிறார்கள். இந்நிலையில், தொடர் மழையால் கொட்டாவூரை சேர்ந்த முருகேசன், சக்திவேல் உள்ளிட்ட பல விவசாயிகள் தங்கள் நிலத்தில் சாகுபடி செய்த நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் முழ்கியது. ஒருசில வயல்களில் நெற்கதிர்கள் மீண்டும் முளைக்க தொடங்கியுள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘வருடம் முழுவதும் நெல் சாகுபடி செய்து வருகிறோம். தற்போது பெய்த மழையால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர்கள் நீரில் முழ்கி நாசமானது. இது வரை எந்த அதிகாரியும் வந்து பார்க்கவில்லை. இது எங்களுக்கு மிகுந்த வேதனையாக உள்ளது. நெல் கதிர்கள் மீண்டும் முளைத்துள்ளதால் பல்லாயிரக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,’ என்றனர். …

The post கொட்டாவூரில் கனமழை வெள்ளத்தில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்-விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Kottavur ,Kaveripatnam ,Panneeswaramadam ,Panchayat Kotavoor ,Tenpenna ,
× RELATED காவேரிப்பட்டணத்தில் 14 ஆண்டுகளாக...