×

ஜப்பானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் குறித்து நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது X தளத்தில் பதிவு!

ஹைதராபாத்: பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது அங்கு இருந்ததாகவும், பாதிப்பின் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை எனவும் தனது X தள பதிவில் பதிவிட்டுள்ளார். ஜப்பான் நாட்டின் இஷிகாவா, நிகாடா உட்பட சில மாகாணங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று முன் தினம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.6 ஆக பதிவாகி இருந்த இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் மையம் கொண்டிருந்ததால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேற்கு கடலோரத்தில் உள்ள நோடோ, இஷிகவா மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து, 90 நிமிடங்களில், 21 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்திற்கு முன்பாகவே ஜூனியர் என்.டி.ஆர் இந்தியா திரும்பியுள்ளார். இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக குடும்பத்துடன் ஜப்பான் சென்றிருந்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் பற்றி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள, ஜூனியர் என்டிஆர்; கடந்த வாரம் முழுவதும் ஜாப்பானில்தான் தங்கியிருந்தேன். இன்றுதான் அங்கிருந்து வீடு திரும்பினேன். இருப்பினும், அங்கு ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பின் அதிர்ச்சியில் இருந்து என்னால் மீளமுடியவில்லை. பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் என் இதயம் வருந்துகிறது. எல்லாம் விரைவில் சரியாகும் என்று நம்புகிறேன். உறுதியாக இருங்கள் ஜப்பான்” என பதிவிட்டுள்ளார்.

 

The post ஜப்பானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் குறித்து நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது X தளத்தில் பதிவு! appeared first on Dinakaran.

Tags : Junior NDR ,Japan ,Hyderabad ,Ishikawa ,Nikata ,
× RELATED விரும்பிய பீர்களை குழாயில் பிடித்து...