×

இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்: அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி


சென்னை: ஜே.என் 1 என்ற புதிய வகை கொரோனா வைரஸால் தமிழகத்தில் 30 பேர் பாதிக்கபட்டுள்ளனர் என்று அமைச்சர் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி அளித்துள்ளார். இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். தமிழகத்தில் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை. வெள்ளம் பாதித்த மாவட்டணங்களில் மழையால் ஏற்படும் காய்ச்சல்கள் எதுவும் இல்லை என்று அமைச்சர் கூறினார்.

முத்த குடிமக்களுக்கான தனி மருத்துவமனை இம்மாத இறுதிக்குள் திறக்கப்படும். சென்னை கிண்டியில் இம்மாத இறுதிக்குள் முத்த குடிமக்களுக்கான தனி மருத்துவமனை திறக்கப்படும். வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். புதிய கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் 4 நாட்களிலேயே குணமாகிவிடுகின்றனர். தமிழ்நாட்டில் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை. யாரும் பதற்றம் அடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்

The post இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்: அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Subramanian ,Chennai ,J. ,Tamil Nadu ,Ma Subramanian ,
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...