×

கடல் அலையில் சிக்கி மாயமான பிளஸ் 2 மாணவர் உடல் மீட்பு

புதுச்சேரி, ஜன. 3: புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் சீனிவாசன் மகள்கள் மோகனா (17), லேகா (14). இவர்கள் 2 பேரும் சுப்பிரமணிய பாரதி அரசு பள்ளியில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் 31ம் தேதி கடற்கரைக்கு புத்தாண்டு கொண்டாட சென்றபோது, இவர்களுடன் அவர்களது குடும்ப நண்பர்களான எல்லைபிள்ளைச்சாவடி முருகையன் மகன் நவீன் (17), அவரது நண்பர் சாரம் பாலாஜி நகர் கிஷோர் (17) ஆகியோர் சென்றனர். இவர்கள் சீகலஸ் ஓட்டல் பின்புறம் கடற்கரையில் குளித்து விளையாடியபோது எழுந்த ராட்சத அலையில் சிக்கி 4 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதுதொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார் வழக்குபதிந்து மாயமானவர்களை தேடினர்.

மாணவி லேகா, அதைத் தொடர்ந்து டிப்ளமோ கேட்டரிங் மாணவரான கிஷோர், பின்னர் மோகனாவின் உடல் அடுத்தடுத்து மீட்கப்பட்டன. அவர்களது உடல்கள் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் ஒரே வீட்டில் 2 மாணவிகள் பலியானதால் நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த மக்கள் சோகத்தில் மூழ்கினர். இதனிடையே மாயமான பிளஸ் 2 மாணவர் நவீனை தேடும் பணி தொடர்ந்து 3வது நாளாக நேற்று நடந்தது. இந்த நிலையில் நவீன் உடல் சின்னவீராம்பட்டினம் ஈடன் பீச் அருகே கரை ஒதுங்கியது. இதையடுத்து அரியாங்குப்பம் போலீசார், ஒதியஞ்சாலை காவல்துறை உதவியுடன் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடல் அலையில் சிக்கி மாயமான பிளஸ் 2 மாணவர் உடல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : wave ,Puducherry ,Srinivasan ,Mohana ,Lekha ,Nellithoppu ,Subramania Bharati Government School ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை