×

பொங்கல் பண்டிகையை வரவேற்க மேலூர் கரும்புகள் அறுவடைக்கு தயார்

மேலூர், ஜன. 3: பொங்கலை வரவேற்கும் விதமாக மேலூர் பகுதியில் உள்ள கரும்புகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலூர் பகுதியில் சூரக்குண்டு, எட்டிமங்கலம், கீழையூர், கீழவளவு, தனியாமங்கலம், சருகுவலையபட்டி, வெள்ளலூர், உறங்கான்பட்டி பகுதியில் செங் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இவை தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு குறிப்பிட்ட நேரத்தில் பெரியாற்று கால்வாயில் தண்ணீர் திறக்கப்படாதததல், கரும்பு உற்பத்தி சற்று குறைவாகவே உள்ளது. சருகுவலையபட்டியை சேர்ந்த விவசாயி விஜயன் கூறியதாவது: கரும்பு உற்பத்தி செலவு அதிகமாகி இருந்தாலும், இந்த ஆண்டு உற்பத்தி சற்று குறைவாக உள்ளதால், விலை சற்று கூடுதலாக இருக்கும்.

உற்பத்தி குறைவால் வெளிமாநிலங்களுக்கு ஏற்றும் அளவிற்கு இங்கு கரும்பு உற்பத்தி சமீபத்தில் இல்லை. இதனால் வெளிமாநில வியாபாரிகள் இந்தாண்டு இங்கு சரிவர வரவில்லை. ஆனால், அதற்கு பதிலாக ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு கரும்பு கொடுக்க வேண்டி நிலை இருக்கும் பட்சத்தில் கூடுதல் விலை கொடுத்து அரசு தரப்பிலும் கொள்முதல் செய்யப்படலாம். அதனால், இந்த ஆண்டு விவசாயிகளுக்கு தித்திப்பு நிறைந்த பொங்கலாக இது மாறலாம், என்றார்.

The post பொங்கல் பண்டிகையை வரவேற்க மேலூர் கரும்புகள் அறுவடைக்கு தயார் appeared first on Dinakaran.

Tags : Malur ,Pongal ,Maleur ,Surakundu ,Ettimangalam ,Allaaiur ,Alkalavalu ,Dhanyamangalam ,Sarukuvalaiapati ,Vellalur ,Rangkanpatty ,Pongal festival ,
× RELATED மேலூர் அருகே இன்று அதிகாலை பள்ளத்தில்...