×

வேலை பெறும் உரிமையை மறுக்கும் செயல் நூறு நாள் வேலைக்கு ஆதார் உத்தரவை திரும்ப பெற வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிக்கை: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைத்து, தேசிய அலைபேசி வருகைப்பதிவு முறையை கட்டாயப்படுத்தி ஏற்கனவே லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை பறித்துள்ளது. தற்போது வேலை அட்டையுடன் ஆதார் அடையாள அட்டையை இணைக்க நிர்பந்தம் செய்கிறது.

டிச.30க்குள் ஆதார் அட்டையை இணைக்காத தொழிலாளர்களுக்கு சட்டபூர்வ வேலை பெறும் உரிமையை முற்றாக பறிக்கும் ஒன்றிய அரசின் விவசாயத் தொழிலாளர் விரோதச் செயலை வன்மையாக கண்டிப்பதுடன், ஆதார் அட்டை கட்டாயம் என்ற உத்தரவை திரும்பப் பெற இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்துகிறது. இது தொடர்பாக மாநில அரசு ஒன்றிய அரசுக்கு வலுவான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

The post வேலை பெறும் உரிமையை மறுக்கும் செயல் நூறு நாள் வேலைக்கு ஆதார் உத்தரவை திரும்ப பெற வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Mutharasan ,CHENNAI ,Communist ,State Secretary ,United Progressive Alliance government ,Telephone ,Dinakaran ,
× RELATED ஹிட்லரை பின்பற்றும் பிரதமர் மோடி: இரா.முத்தரசன் தாக்கு