×

விஜயகாந்திற்கு மதுரையில் சிலை கலெக்டரிடம் தேமுதிகவினர் மனு

மதுரை: மதுரையில் விஜயகாந்திற்கு சிலை அமைக்க வேண்டும் என தேமுதிக நிர்வாகிகள், கலெக்டர் சங்கீதாவிடம் மனு அளித்தனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிச. 28ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். மதுரையை சேர்ந்த விஜயகாந்துக்கு மதுரையில் வெண்கல சிலை வைக்க வேண்டுமென விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், மதுரை மேயர் இந்திராணிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மதுரை மாவட்ட தேமுதிக நிர்வாகிகள், கலெக்டர் சங்கீதாவை சந்தித்து மனு அளித்தனர்.

The post விஜயகாந்திற்கு மதுரையில் சிலை கலெக்டரிடம் தேமுதிகவினர் மனு appeared first on Dinakaran.

Tags : Demuthikava ,Madurai ,Vijayakanth ,DMD ,Collector ,Sangeeta ,DMDK ,Demudikavan ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...