×

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய கல்யாணபுரம் திட்டப்பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (2.1.2024) கல்யாணபுரம் திட்டப்பகுதியில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில்:
துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் திட்டப்பகுதியில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் ரூ.44.91 கோடி மதிப்பீட்டில் 288 புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே இங்கு வசித்த 254 குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்து மீதமுள்ள குடியிருப்புகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகளை தேர்ந்தெடுத்து ஒதுக்கீடு செய்யப்படும்.

இக்குடியிருப்புகள் ஒவ்வொன்றும் 412 ச.அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் காற்றோட்ட வசதியுடன் கூடிய வசிப்பறை, சமையலறை, குளியலறை, கழிவறை, மின்தூக்கி மற்றும் மின் ஆக்கி ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. மேலும் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது எனவும் , விரைவில் பயனாளிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர். சு.பிரபாகர் இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொ) இளம்பரிதி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

The post தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய கல்யாணபுரம் திட்டப்பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Urban Habitat Development Board ,Kalyanapuram ,Minister ,PK Shekharbabu ,CHENNAI ,Minister for ,Hindu Religion and Charities ,PK Sekarbabu ,Department of Hindu Religion and Charities ,
× RELATED தென்சென்னை தொகுதியில்...