×

‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற பேனருடன் 13,000 அடி உயரத்தில் ‘ஸ்கை டைவிங்’ : உத்தர பிரதேச இளம்பெண் சாதனை

பாங்காங்: பாங்காக்கில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற பேனருடன் 13,000 அடி உயரத்தில் ‘ஸ்கை டைவிங்’ செய்த உத்தர பிரதேச இளம்பெண்ணை பலரும் பாராட்டுகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த அனாமிகா சர்மா (23) என்பவர், தனது 20 வயதில் ஸ்கை டைவிங் உரிமத்தைப் பெற்றார். இந்தியாவின் இளைய ஸ்கை டைவரான இவர், பெங்களூருவில் உள்ள பிஎஸ்எம்ஐடி கல்லூரியின் பிடெக் மாணவியாவார்.

தனது 10 வயதில் இருந்தே ஸ்கை டைவிங் ஜம்ப் செய்து பயிற்சி பெற்று வந்தார். இதுவரை 300 ஸ்கை டைவிங் சாதனைகளை படைத்த அனாமிகா சர்மா, உலகின் இளம் ஸ்கை டைவிங் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். விங்சூட் ஸ்விங் ஸ்கைடைவ் மற்றும் விங்சூட் ரேடியோ ஸ்கைடைவ் ஆகியவற்றை நிகழ்த்திய ஒரே இந்திய ஸ்கை டைவர் அனாமிகா என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் பாங்காக்கில் ‘ஜெய்  ராம்’ என்ற பேனருடன் 13,000 அடி உயரத்தில் ஸ்கை டைவிங் செய்தார். அவரது தந்தை அஜய் சர்மா, அயோத்தி ராமரின் தீவிர பக்தர் என்பதால், மகளான அனாமிகா சர்மா இந்த சாதனையை செய்துள்ளார். முன்னதாக இந்திய விமானப் படையில் இருந்து ஓய்வு பெற்ற ஜூனியர் அதிகாரியும், தொழில்முறை ஸ்கை டைவிங் வீரருமான அஜய் குமார் சர்மா, இதுவரை 650 முறை ஸ்கை டைவிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற பேனருடன் 13,000 அடி உயரத்தில் ‘ஸ்கை டைவிங்’ : உத்தர பிரதேச இளம்பெண் சாதனை appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,BANGKONG ,Jai ,Bangkok ,Anamika Sharma ,Prayagraj, Uttar Pradesh ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...