×

ஜெயலலிதா மரண விசாரணை… ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவாக்கத் தயார்.: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வாதம்

டெல்லி: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவாக்கத் தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதிகளை கொண்ட இரு நபர் விசாரணை ஆணையத்தை அமைக்கலாம் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு எதிராக அப்போலோ மருத்துவமனை தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ஜெயலலிதா மரணம் குறித்த உண்மைகளை மக்களுக்கு செல்வது மிக மிக முக்கியம் என்பதால், ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவாக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் ஆணையத்தை முற்றிலும் மாற்றுவதற்கு தமிழக அரசுக்கு ஏதேனும் ஆட்சேபனையும் இல்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆட்சேபனையம் இல்லை என்று பதில் அளித்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ஆறுமுகசாமி ஆணையம் 95% விசாரணையை முடிந்துவிட்டதாக அவர் கூறினார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஒய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளான பானுமதி, உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் ஆகியோரை கொண்ட இரு நபர் ஆணையத்தை அமைக்கலாம் என மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே தெரிவித்தார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக்கு ஆணையம் உண்மை கண்டறியும் குழு தான் தவிர அது நிபுணர் குழு அல்ல என்ற அவர், அதில் மருத்துவர்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். இருப்பினும் மருத்துவர்கள் ஆணையத்துக்கு உதவும் வகையில் நியமிக்க தமிழக அரசு தயாராக உள்ளதாக துஷ்யந்த் தவே தெரிவித்துள்ளார்….

The post ஜெயலலிதா மரண விசாரணை… ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவாக்கத் தயார்.: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வாதம் appeared first on Dinakaran.

Tags : Jayalalithah ,Arumumusamy Commission ,Arumukasamy Commission ,Tamil Nadu ,Supreme Court ,Delhi ,Tamil Nadu Govt ,Government of Tamil Nadu ,
× RELATED ஜெயலலிதா ஆட்சியில் வாச்சாத்தி கிராம...