×

கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கேரளாவில் மது விற்பனை அமோகம்: 10 நாட்களில் ரூ.543 கோடிக்கு விற்பனை!!

திருவனந்தபுரம்: கேரளாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி மதுபான விற்பனை களைகட்டிய நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 70.73 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. மூன்று நாட்கள் மது விற்பனையில், சாலக்குடி பகுதியில் மட்டும் 63.85 லட்சம் ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகி மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. சங்ஙனாசேரியில் 62.87 லட்சம் ரூபாய்க்கும், இரிஞ்ஞாலக்குடாவில் 62.31 லட்சம் ரூபாய்க்கும் மதுபானம் விற்பனையானது.

இந்நிலையில், கேரளாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி கடந்த 10 நாட்களில் ரூ.543 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. கடந்த ஆண்டை விட கூடுதலாக ரூ.27 கோடிக்கு அதிகமாக மது விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டையொட்டி ஞாயிற்றுக்கிழமை ரூ.94.54 கோடிக்கு மது விற்கப்பட்டுள்ளது. இதேபோன்று கிறிஸ்துமஸ்க்கு முந்தைய நாளாக ஞாயிற்றுக்கிழமை ரூ.70.73 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கேரளாவில் மது விற்பனை அமோகம்: 10 நாட்களில் ரூ.543 கோடிக்கு விற்பனை!! appeared first on Dinakaran.

Tags : Christmas ,New Year ,Kerala ,Thiruvananthapuram ,Chalakudy ,
× RELATED ஜூன் 3ல் பாபா ராம்தேவ் ஆஜராக கேரள நீதிமன்றம் ஆணை