×

பகையின் உச்சிக்கே சென்ற இஸ்ரேல்.. குறிவைத்து தாக்கப்படும் ஹமாஸ் அமைப்பின் சுரங்கங்கள்: கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள 187 உடல்கள்!!

காசா: காசாவுக்குள் நுழைந்து ஹமாஸ் இயக்கத்தின் ரகசிய சுரங்களை அளித்துள்ளது இஸ்ரேல். இதில் 187 பேர் உயிரிழந்துள்ளனர். அக்டோபர் 7ல் துவங்கிய இஸ்ரேல் – ஹாமாஸ்க்கு இடையேயான போரானது 85வது நாளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஹமாஸ் அமைப்பை கூண்டோடு அளிக்க தரைவழி தாக்குதலை வலிமைப்படுத்தி உள்ளது இஸ்ரேல். கடந்த 24 மணிநேரத்தில் நடந்த உக்கிரமான தாக்குதலுக்கு 187 பேர் பலியாகியுள்ளனர். ஹமாஸ் அமைப்பின் ரகசிய சுரங்கங்கள் அந்த இயக்கத்திற்கு பாதுகாப்பு அரண்களாக இருந்த ஒன்று.

பல கிலோ மீட்டருக்கு நீளும் இந்த சுரங்கங்கள் ஒரு காலத்தில் ஆயுத கடத்தலுக்கும், பதுங்குவதற்கும் பயன்பட்டது. அவ்வப்போது சுரங்கப்பாதை தேடுதல் நடத்துவதும் அதை தாக்கி அளிப்பதும் இஸ்ரேலின் வழக்கமான நடவடிக்கை தான். கடந்த சில நாட்களுக்கு முன் காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரத்தில் குண்டு மழை பொழிந்துள்ளது இஸ்ரேல் ராணுவம். காசாவுக்குள் நுழைந்து ஹமாஸ் சுரங்கப்பாதை வளாகத்தை அளித்துள்ளது என தகவலும் வெளியாகியுள்ளது. கடந்த 24 மணிநேரம் நடந்த தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலில் உயிரிழந்த அந்த உடல்கள் கட்டிட இடிபாடுகளிலும், மறைவிடங்களிலும் கிடப்பதாக கூறப்படுகிறது.

மத்திய காசாவில் உள்ள முகாம் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழி தாக்குதல்களை நடத்தியதாக மருத்துவர்கள், பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். ஹமாஸ் தலைவர் வீடு ஒன்றில் உள்ள அடித்தளத்தில் சுரங்கப்பாதை வளாகத்தை அளித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்த பத்திரிகையாளர் ஒருவரும் குடும்பத்துடன் சேர்ந்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுவரை 106 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் கொள்ளப்பட்டு இருக்கின்றனர். போர் தொடங்கியதில் இருந்து இப்போது வரை இஸ்ரேல் தரப்பு 1,400 பேரை இழந்துள்ளது. பதிலடி கொடுப்பதாக இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் காசாவில் 21,507 பேர் உயிரிழந்துள்ளனர்.

The post பகையின் உச்சிக்கே சென்ற இஸ்ரேல்.. குறிவைத்து தாக்கப்படும் ஹமாஸ் அமைப்பின் சுரங்கங்கள்: கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள 187 உடல்கள்!! appeared first on Dinakaran.

Tags : Israel ,Hamas ,Gaza ,
× RELATED ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில்...