×

தமிழ்நாடு முழுவதும் அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாட்டம்: சிறப்பான பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாநிலம் முழுவதும் டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் மேற்பார்வையில் அனைத்து மாநகர கமிஷனர்கள், 4 மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள், 38 மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் 1.20 லட்சம் போலீசார் நேற்று முன்தினம் முதல் நேற்று அதிகாலை வரை விடவிடாமல் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். மாவட்ட வாரியாக போலீசார் திட்டமிட்டு கோயில், தேவாலயங்களுக்கு பொதுமக்கள் தடையின்றி வழிபாடு நடத்த போலீசார் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

சுற்றுலா தலங்கள், கடற்கரை பகுதிகளில் ‘டிரோன்’ மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் போலீசாரின் சிறப்பான பணி காரணமாக சாலை விபத்துக்கள் தடுக்கப்பட்டது. மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களிடன் எண்ணிக்கையும் குறைந்தது. நட்சத்திர ஓட்டல்கள், ரிசாட்டுகள், பன்னை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் இரவு 1 மணியுடன் முடிக்கப்பட்டது. அதை போலீசார் நேரில் சென்று ஆய்வு ெசய்து உறுதி செய்தனர்.

2024 புத்தாண்டை சிறப்பாக நடத்தி முடித்த அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு முழுவதும் 31ம் தேதி இரவு முதல் 1ம் தேதி காலை வரை சட்டம் ஒழுங்கு பராமரிக்கவும், சாலை விபத்துக்கள் மற்றம் இதர அசம்பாவிதங்களை தடுக்கவும் தமிழ்நாடு காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தாலும், எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நிகழாமல் மாநிலம் முழுவதும் புத்தாண்டு அமைதியான முறையில் கொண்டாடப்பட்டது.

இந்த புத்தாண்டு பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட அனைத்து காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாட்டம்: சிறப்பான பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Peaceful ,New Year ,Tamil Nadu ,DGP ,Shankar Jiwal ,CHENNAI ,Zonal IGs ,DIGs ,District ,Arun ,Jiwal ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...