×

சில்லிபாயிண்ட்…


* இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ள ஜிம்பாப்வே அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஒருநாள் போட்டிகளுக்கு கிரெய்க் எர்வின், டி20 போட்டிகளில் சிக்கந்தர் ரஸா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆல் ரவுண்டர் ஷான் வில்லியம்ஸ் காயம் காரணமாக இந்த தொடகளில் இருந்து விலகியுள்ளார்.

* இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, மும்பை வாங்கடே மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலியா ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்ட நிலையில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி ஆறுதல் வெற்றிக்காக வரிந்துகட்டுகிறது.

* நியூசிலாந்து அணிக்கு எதிராக நடக்க உள்ள டெஸ்ட் தொடருக்கு முன்னணி வீரர்கள் இல்லாமல் பலவீனமான தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளதற்கு ஆஸி. அணி முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் பிசிசிஐ உள்ளிட்ட கிரிக்கெட் வாரியங்கள், டெஸ்ட் போட்டிகளை விட உள்ளூர் டி20 போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதே இந்த நிலைமைக்கு காரணம் என்றும் அவர் சாடியுள்ளார்.

* பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜெர்மனியின் தாமரா கோர்பட்ஷ் உடன் நேற்று மோதிய ஜப்பான் நட்சத்திரம் நவோமி ஒசாகா 6-3, 7-6 (11-9) என்ற நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இதே தொடரின் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் மார்க் லோபஸுடன் இணைந்து களமிறங்கிய ரபேல் நடால் 4-6, 4-6 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் பர்செல் – ஜோர்டன் தாம்சன் இணையிடம் தோல்வியைத் தழுவினார்.

The post சில்லிபாயிண்ட்… appeared first on Dinakaran.

Tags : Sillypoint… ,Zimbabwe ,Sri Lanka ,T20 ,Craig Erwin ,Sikandar Raza ,T20Is ,Shaun Williams ,Dinakaran ,
× RELATED இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு