×

13 பசு மாடு, 11 கன்றுகுட்டி பீகார் முதல்வர் நிதிஷின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி: துணை முதல்வர் தேஜஸ்விக்கு ரூ.6 கோடி

பாட்னா: பீகாரில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ம் தேதி முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் தங்கள் சொத்து கணக்கு விவரங்களை அரசிடம் தாக்கல் செய்வது கட்டாயம். இதன்படி, முதல்வர் நிதிஷ்குமார் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தின்படி அவரது சொத்து மதிப்பு ரூ. 1.64 கோடியாகும். முந்தைய ஆண்டு அவரது சொத்து மதிப்பு ரூ. 75.53 லட்சமாக இருந்தது. டெல்லியில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பின் மதிப்பு அதிகரித்ததே இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

அவரது சொத்து விவரம்: டெல்லியில் கடந்த 2004ம் ஆண்டு ரூ.13.78 லட்சம் செலவில் வாங்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் தற்போதைய மதிப்பு ரூ.1.48 கோடியாக அதிகரித்துள்ளது. இது தவிர ரூ.11.32 லட்சம் மதிப்புள்ள போர்டு எக்கோ ஸ்போர்ட்ஸ் கார், ரூ.1.28 லட்சம் மதிப்புள்ள வெள்ளி மோதிரம், ரூ.1.45 லட்சம் மதிப்புள்ள 13 பசு மாடுகள், கன்றுகுட்டிகள், ஒரு உடல்பயிற்சி சைக்கிள், மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்டவை வைத்துள்ளார்.

வங்கியில் ரூ.49,202ம், கையில் ரொக்கமாக ரூ.22,552ம் வைத்துள்ளார். துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் சொத்து மதிப்பு ரூ. 6 கோடி. தேஜஸ்வியின் அண்ணனும் அமைச்சருமான தேஜ் பிரதாப்புக்கு ரூ.3.58 கோடி சொத்து உள்ளது.

The post 13 பசு மாடு, 11 கன்றுகுட்டி பீகார் முதல்வர் நிதிஷின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி: துணை முதல்வர் தேஜஸ்விக்கு ரூ.6 கோடி appeared first on Dinakaran.

Tags : Bihar ,Chief Minister Nitish ,Deputy Chief Minister ,Tejaswi ,Patna ,Chief Minister ,Nitishkumar ,Dinakaran ,
× RELATED 10 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பேசிய...