×

கொலையான பூசாரி மனைவிக்கு அரசு வேலை வழங்க பரிசீலனை : ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: கொலையான பூசாரி மனைவிக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலனையில் உள்ளதாக ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு கூறியது. இதனால் அந்த மனு முடித்து வைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம், சீவலப்பேரியைச் சேர்ந்த பசுங்கிளி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் துரை(எ)சிதம்பரம். சுடலைமாடசாமி கோயிலில் பூசாரியாக இருந்தார். ேகாயில் வளாகத்தில் கடை கட்டும் பிரச்னை தொடர்பாக கடந்த 18.4.2021ல் கொலை செய்யப்பட்டார். இதற்காக உரிய இழப்பீடு, கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்தார். அரசு கூடுதல் பிளீடர் பி.சரவணன் ஆஜராகி, ‘‘கொலையானவரின் குடும்பத்திற்கு அரசு தரப்பில் ரூ.3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. விதிப்படி அரசுப் பணி அல்லாதோருக்கு நிரந்தர பணி வழங்க முடியாது. இருந்தாலும் மனுதாரர் தரப்பு கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தற்காலிக வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி, தகுந்த பணியிடங்கள் குறித்த விபரத்தை அரசு கோரியுள்ளது. சிறப்பினமாக நிரந்தர வேலை வாய்ப்பு தொடர்பான அறிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதி, மனுதாரர் தரப்புக்கு ஏற்கனவே ரூ.3 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. அரசு வேலை குறித்தும் பரிசீலனையில் உள்ளது. இதன் மீது விரைவில் உத்தரவிடப்படும். மனுதாரர் தரப்பு கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால், இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவிட்டுள்ளார்.

The post கொலையான பூசாரி மனைவிக்கு அரசு வேலை வழங்க பரிசீலனை : ஐகோர்ட் கிளையில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,Tamil ,Nadu ,Basungli ,Sivalapperi, Nellai district ,
× RELATED தமிழகத்தில் அனைத்து மத்திய...