×

புரோ கபடி லீக்கில் இன்று தெலுங்கு-புனேரி பால்டன், உ.பி.யோத்தா- பாட்னா மோதல்

நொய்டா: 12 அணிகள் பங்கேற்றுள்ள 10வது புரோ கபடி லீக் போட்டிகள் தற்போது உ.பி.மாநிலம் நொய்டாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 49வது லீக் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் 5-142 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் தமிழ் தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் முதல் பாதியில் 20-17 என தமிழ்தலைவாஸ் முன்னிலை பெற்றது. ஆனால் 2வது பாதியில் கோட்டை விட்டது. இதனால் 38-37 என பெங்களூரு த்ரில் வெற்றி பெற்றது. இன்று இரவு 8 மணிக்கு தெலுங்கு டைட்டன்ஸ்-புனேரி பால்டன், இரவு 9 மணிக்கு உ.பி.யோத்தா-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

The post புரோ கபடி லீக்கில் இன்று தெலுங்கு-புனேரி பால்டன், உ.பி.யோத்தா- பாட்னா மோதல் appeared first on Dinakaran.

Tags : Puneri Paltan ,UP Yoda-Patna ,Pro Kabaddi League ,Noida ,Noida, UP ,49th league ,Gujarat Giants ,Bengal Warriors ,Dinakaran ,
× RELATED புனே – அரியானா பலப்பரீட்சை: புதிய சாம்பியன் யார் ?