×

நெல்லை மாவட்டத்தில் ₹150 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ₹150 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண பணிகளை பார்வையிட அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று நெல்லைக்கு சென்றார்.

பின்னர் அவர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த பேட்டி: கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண உதவிகளை உடனுக்குடன் வழங்கி வருகிறோம். இதில் 4 தாலுகாக்களில் வெள்ளத்தால் அதிக பாதிப்புகள் உள்ளன. அம்மக்களுக்கு ₹6 ஆயிரமும், மீதிமுள்ள தாலுகாக்களுக்கு ₹1000 நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் 5 லட்சத்து 4 ஆயிரத்து 387 ரேஷன் கார்டுகளுக்கு 840 கடைகள் மூலம் வெள்ள நிவாரண நிதியுதவி வழங்கப்பட உள்ளது.

இதில் ₹1000 நிவாரண தொகையானது ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 705 கார்டுகளுக்கு வழங்கப்பட வேண்டும். சனிக்கிழமை மாலை வரை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 25 கார்டுகளுக்கு ₹1000 வழங்கப்பட்டு விட்டது. ₹6 ஆயிரம் நிதியுதவியானது, 3 லட்சத்து 40 ஆயிரத்து 632 கார்டுகளுக்கு வழங்கப்பட வேண்டும். சனிக்கிழமை மாலை வரை 2 லட்சத்து 32 ஆயிரத்து 379 கார்டுகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. மொத்தமாக நெல்லை மாவட்டத்திற்கு வெள்ள நிவாரண நிதியுதவி ₹220 கோடி வழங்கப்பட உள்ளது. இதில் சனிக்கிழமை மாலை வரை ₹150 கோடி வரை நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமைகளுக்குள் மீதமுள்ள அனைவருக்கும் நிவாரண நிதி வழங்கப்பட்டு விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post நெல்லை மாவட்டத்தில் ₹150 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Nella district ,Minister ,Saminathan ,Nella ,Tamil Development ,Media Minister ,MLA ,Fr. ,Minister Mu Fr. ,Dinakaran ,
× RELATED வள்ளியூரிலிருந்து திசையன்விளைக்கு...