×

கோவையில் ரேக்ளா ரேஸ் ஐநூறு காளைகள் சீறி பாய்ந்தன

 

கோவை, ஜன.1: மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி போன்று, கோவை உள்ளிட்ட கொங்கு நாடு பகுதியில் பிரபலமாக நடப்பது ரேக்ளா ரேஸ். நாட்டு மாடுகளை ரேக்ளா வண்டியில் பூட்டி வெற்றி இலக்காக குறிப்பிட்ட தூரத்தை நிர்ணயித்து, குறைந்த நேரத்தில் எல்லையை கடக்கும் ரேக்ளா காளைகள் போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் கோவையில் கே.பி.ஆர். கலை அறிவியல் கல்லூரி மற்றும் ரேக்ளா அமைப்பினர் இணைந்து “காளையர் திருவிழா” என்ற தலைப்பில் ரேக்ளா பந்தயம் நடத்தினர். தமிழ்நாட்டின் பாரம்பரிய மிக்க விழாவில் ஒன்றான ரேக்ளா பந்தயத்தில் மாநிலம் முழுவதுமிருந்து 500 காளைகள் களமிறங்கி போட்டியிட்டன.200 மீட்டர், 300 மீட்டர் தூரம் என இரண்டு பிரிவில் நடந்த போட்டியில், ஜோடி மாடுகளை பூட்டிய ரேக்ளா வண்டிகள் புல்லட் வேகத்தில் ரெக்கை கட்டி பறந்தன.

போட்டியில் பங்கேற்றவர்கள் கூறுகையில்: காளை களத்தில் பரிசு வெல்வதனை விட,பந்தயத்தில் களமிறங்கி ஓடுவதே கெளரவம். இதற்காகவே காளைகளை வளர்க்கின்றோம்.காளைகளுக்கு சத்தான உணவுகளான பருத்தி கொட்டை, புன்னாக்கு போட்டி நேரங்களில் குளுக்கோஸ் உள்ளிட்டவை தருகின்றோம். நமது மண்ணின் பாரம்பரிய மிக்க இந்த ரேக்ளா எங்கு நடந்தாலும்,அங்கு சென்று களமிறங்குவோம். வாரத்தின் விடுமுறை நாட்களில் பந்தயத்துக்கு செல்வோம். இதற்காக காளைகளுக்கு வழக்கத்தினை விட கூடுதலாக பணம் செலவழித்து திடகாத்திரமாக வளர்க்கிறோம்’ இவ்வாறு தெரிவித்தனர்.

The post கோவையில் ரேக்ளா ரேஸ் ஐநூறு காளைகள் சீறி பாய்ந்தன appeared first on Dinakaran.

Tags : Rakla Race ,Coimbatore ,Rekla Race ,Kongu Nadu ,Madurai ,Dindigul ,Rekla ,
× RELATED பழைய அரசாணைப்படி ரேக்ளா ரேஸ்: ஐகோர்ட் அனுமதி