×

டாக்டர்களுக்கு பல மணிநேரம் தொடர் பணி வழங்கக் கூடாது: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் வெளியிட்ட அறிக்கை: தொடர்ச்சியான பல மணி நேர வேலைப்பளுவின் காரணமாக,தஞ்சை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 26 வயது முதுநிலை மருத்துவ மாணவர் டாக்டர் தமிழ் அழகன் மரணமடைந்துள்ளார். இறப்பதற்கு முன்பு தொடர்ச்சியாக 48 மணிநேரம் பணி செய்ததாக கூறப்படுகிறது.

அவரது மரணம் மிகுந்த கவலையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. அனைத்து அரசு மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களின் வேலை நேரம் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 8 மணி நேரம், ஒரு வாரத்துக்கு 48 மணி நேரம் மட்டுமே இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், 24 மணி, 36 மணி, 48 மணி நேரம் என தொடர்ச்சியான பணியை மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களுக்கு வழங்கிடக் கூடாது.

The post டாக்டர்களுக்கு பல மணிநேரம் தொடர் பணி வழங்கக் கூடாது: டாக்டர்கள் சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Doctors Association ,Chennai ,General Secretary of ,Doctors Association for Social Equality ,Rabindranath ,Dr. ,Tamil Alagan ,Thanjavur Medical College ,Doctors' Association ,Dinakaran ,
× RELATED அதிமுக செய்த தவறுகளுக்காக தண்டனை...