×

கனடாவில் செயல்படும் பாபர் கல்சாவின் லக்பீர் சிங் தீவிரவாதியாக அறிவிப்பு: ஒன்றிய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: கனடாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தடை செய்யப்பட்ட சர்வதேச பாபர் கல்சா அமைப்பை சேர்ந்த லாண்டாவை தீவிரவாதியாக ஒன்றிய அரசு அறிவித்தது. பஞ்சாபில் தரண் தரண் மாவட்டத்தில் உள்ள ஹரிகே பகுதியை சேர்ந்த லக்பீர் சிங் தற்போது கனடாவின் அல்பெர்டாவில் உள்ள எட்மன்டன் நகரில் வசித்து வருகிறார். இவர் கனடாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட சர்வதேச பாபர் கல்சா அமைப்பின் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், ஒன்றிய அரசு இவரை தீவிரவாதியாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு தேவையான அதிநவீன ஆயுதங்கள், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் மற்றும் போதைப்பொருள்களை ஆகியவற்றை சட்டவிரோதமாக கடத்தி வினியோகித்தல், கடந்த 2022 மே பஞ்சாப் காவல்துறையின் நுண்ணறிவு பிரிவின் தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட வழக்குகளில் லக்பீர் சிங் என்ற லாண்டாவுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

மேற்கூறிய குற்றங்களில் இவர் ஈடுபட்டதற்கு போதுமான சான்றுகள் உள்ளன. எனவே லக்பீர் சிங் என்ற லாண்டாவை சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டத்தின் 4வது அட்டவணைப்படி தீவிரவாதியாக அறிவிக்கப்படுகிறார்,’’ என்று கூறப்பட்டுள்ளது.

ஹுரியத்துக்கு தடை
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பதிவில், ‘’இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்தில், தீவிரவாதத்தை தூண்டுதல், ஜம்மு காஷ்மீரில் பிரிவினை வாதத்தை தூண்டுதல் ஆகியவற்றின் மூலம் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் பாகிஸ்தான் ஆதரவு அமைப்பான தெஹ்ரிக் இ ஹுரியத் அமைப்புக்கு தடை விதிக்கப்படுகிறது,’’ என்று கூறியுள்ளார். இதன் தலைவர் சையத் அலி ஷா கிலானி மறைவுக்கு பின், மஸ்ரத் ஆலம் பாட் தற்போது தலைவராக உள்ளார்.

The post கனடாவில் செயல்படும் பாபர் கல்சாவின் லக்பீர் சிங் தீவிரவாதியாக அறிவிப்பு: ஒன்றிய அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Canada ,Babar ,Lakhbir Singh ,Union Govt ,New Delhi ,Union government ,Landa ,Babar Khalsa ,Harike ,Taran Taran ,Punjab ,Alberta, Canada ,Khalsa ,Dinakaran ,
× RELATED கனடா சாலை விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த தம்பதி, பேரக்குழந்தை பலி