ஆக்லாந்து: உலகில் முதல் நாடக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. நாட்டில் 2023ஆம் ஆண்டு நிறைவடைந்து 2024ஆம் ஆண்டு பிறந்தது. நியூசிலாந்தின் ஆக்லாந்து, வெலிங்டன் உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
2023ஆம் ஆண்டு நிறைவடைந்து 2024ஆம் ஆண்டு பிறக்க உள்ளதையடுத்து உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் புத்தாண்டை வரவேற்க ஆயத்தமாகி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் புத்தாண்டை முன்னிட்டு பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 7 மணி நேரமே உள்ள நிலையில் புத்தாண்டை வரவேற்பதற்காக பல்வேறு நகரங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் உலகில் முதல் நாடக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தின் ஆக்லாந்து, வெலிங்டன் உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. கேக் வெட்டி ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
The post உலகில் முதல் நாடக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது: புத்தாண்டு கொண்டாட்டத்தில் திளைக்கும் மக்கள்! appeared first on Dinakaran.