×

அறநிலையத்துறை கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள்; விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன: அமைச்சர் சேகர் பாபு தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பத்திரிகைகள் மூலம் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிற நிலையில், 2 மாத காலத்திற்குள் அனைத்துப்பணிகளும் முடிக்கப்பட்டு நேர்முகத் தேர்வுகள் தொடங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் இருந்தப்படியே காணொலி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.

ெதாடர்ந்து அவர் கூறுகையில், ‘உயர் நீதிமன்றத்தின் அறிவுரையின்படி தொல்லியல் துறை சார்ந்த அமைப்பார்களும், நீதிமன்ற குழு சார்ந்த அதிகாரிகளும் சிதம்பரம் நடராசர் கோயிலில் கனக சபை மீது ஏறி பொதுமக்கள் வழிபடுவதற்கான அனுமதி வழங்குவதற்காக ஆய்வுகளை செய்திருக்கிறார்கள். என்னென்னவெல்லாம் இருக்கின்றன என்பதற்கான ஆதாரங்களை திரட்டி அதை சமர்ப்பிக்க இருக்கிறோம். இந்த வழக்கு நீதிமன்றத்தில் வருகிறபோது அதை விசாரிக்க இருக்கின்ற நீதிபதியிடம் விதிமீறல்கள் பற்றி முழுமையான விவரங்கள் தெரிவிக்க இருக்கின்றோம்.

கன்னியாகுமரி திருக்கோயிலிலும், பழனி ஆண்டவர் திருக்கோயிலிலும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. முறையாக பத்திரிகையில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 2 மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு காலிப் பணிங்கள் நிரப்பப்படுவதற்கான பணிகள் விரைவு படுத்தப்படும். இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பத்திரிகைகள் மூலம் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிற நிலையில், 2 மாத காலத்திற்குள் அனைத்துப்பணிகளும் முடிக்கப்பட்டு நேர்முகத் தேர்வுகள் தொடங்கப்படும். கடந்த ஆண்டுகளில் எந்தெந்த திருக்கோவில்களில் எல்லாம் இரவு 12 மணிக்கு திறக்கப்பட்டு இருந்ததோ அந்த நடைமுறையை பின்பற்றி சொல்லியும் பக்தர்களுக்கு வெகு தரிசனத்தை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.

The post அறநிலையத்துறை கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள்; விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன: அமைச்சர் சேகர் பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekhar Babu ,Chennai ,Hindu Religious Institutions Colleges ,Sekhar Babu ,Department of Hindu Religious Endowment ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர் தீரன்...