×

நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி

 

ஊட்டி,டிச.31: ஊட்டி படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டியில் உள்ள படகு இல்லத்திற்கு சென்று,அங்குள்ள ஏரியில் படகு சவாரி மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக, இங்குள்ள மிதி படகுகள், துடுப்பு படகுகள் மற்றும் மோட்டார் படகுகளில் சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், பள்ளி அரையாண்டு தேர்வு மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிட்டுள்ளனர். இவர்கள், ஊட்டி படகு இல்லத்திற்கு சென்று அங்கு ஏரியில் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால்,நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனினும், சுற்றுலா பயணிகள் வெகு நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்கின்றனர். மேலும், அங்குள்ள மினி ரயிலிலும் பயணித்து மகிழ்ச்சியடைகின்றனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், தற்போது ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் களைகட்டியுள்ளது. இன்றும், நாளையும் மேலும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வர வாய்ப்புள்ளது.

The post நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty Boat House ,Nilgiris ,Ooty… ,Dinakaran ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்