×

சாகச வளையத்தை 1.30 மணி நேரம் சுற்றி கோவை சிறுவன் உலக சாதனை

 

கோவை, டிச.31: கோவை சாய்பாபாகாலனி பகுதியை சேர்ந்த அசோக், ரஞ்சனி ஆகிய தம்பதியரின் மகன் ஆரவ் (11). இவர்சிறு வயது முதலே ஹூலா ஹூப் எனும் சாகச வளையம் சுற்றுவதில் ஈடுபாடு கொண்டவர். சாகச வளையத்தை சுற்றி கொண்டே பல்வேறு செயல்களை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆரவின் திறமையை கண்ட இவரது பெற்றோர் இவருக்கு முறையான ஹூலா ஹூப் பயிற்சியை அளித்தனர்.

இதன் காரணமாக தற்போது கோவை சாய்பாபா காலனியில் நோபல் உலக சாதனை புத்தகத்தின் தீர்ப்பாளர் சிவமுருகன் முன்னிலையில், சிறுவன் உலக சாதனை முயற்சியை மேற்கொண்டார். இதில் ஹூலா ஹூப் சாகச வளையத்தை மொத்தம் 1.30 மணி நேரம் சுற்றி கொண்டே வீடியோ கேம் விளையாடுவது, உடை மாற்றுவது, தண்ணீர் குடிப்பது, நடந்து செல்வது என பல்வேறு செயல்களை செய்து உலக சாதனை புரிந்தார். இந்த சாதனையை நோபல் உலக சாதனை புத்தகம் அங்கிகரித்துள்ளது. சிறுவன் ஆரவின் உலக சாதனை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post சாகச வளையத்தை 1.30 மணி நேரம் சுற்றி கோவை சிறுவன் உலக சாதனை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Aarav ,Ashok ,Ranjani ,Saibabakalani ,
× RELATED கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து...