×

மின் கசிவால் பனியன் கடையில் தீ விபத்து

 

ஈரோடு, டிச.31: ஈரோட்டில் மின் கசிவால் பனியன் கடையில் தீ விபத்து ஏற்பட்டு விற்பனைக்கு வைத்திருந்த பனியன்கள் தீயில் எரிந்து நாசமானது. ஈரோடு கருங்கல்பாளையம் வரகப்பா வீதியில் மணி (29) என்பவர் பனியன் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு விற்பனையை முடித்துவிட்டு கடையை வழக்கம்போல் பூட்டிவிட்டு சென்றார். இந்நிலையில், நேற்று அதிகாலை மணியின் கடையில் இருந்து கரும்புகை அதிகளவில் வெளியேறியது.

இதைப்பார்த்த, அவ்வழியாக சென்றவர்கள் ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 15 நிமிடம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும், கடையில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த பனியன்கள் தீயில் எரிந்து நாசமாகின. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post மின் கசிவால் பனியன் கடையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Banyan ,Erode ,banyans ,Mani ,Varakappa Road, Karungalpalayam, Erode ,Dinakaran ,
× RELATED ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பால் பனியன் தொழில் பாதிப்பு: கமல் குற்றச்சாட்டு