×

ஆண்டிபட்டி அருகே கண்மாய்களில் 20 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடும் பணி: ஊராட்சி தலைவர் துவக்கி வைத்தார்

 

ஆண்டிபட்டி, டிச. 31: ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள டி.சிலுக்குவார்பட்டி ஆதிதிராவிடர் காலனி, டி.சேடபட்டி, டி.ராஜகோபாலன்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் தற்போது மழைநீர் தேங்கியுள்ளது. கன்மாயில் மழைநீர் தேங்கியுள்ளதால், ஊராட்சிக்கு வருவாய் ஈட்டும் வகையில் மீன்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கலாம் என ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தனர்.

இதனால் கண்மாயில் தேங்கிய நீரில் வைகை அணையில் இருந்து வாங்கி வரப்பட்ட ரூ.7000 மதிப்புள்ள கட்லா, மிருகாள், ரோகு, ஜிலேபி, வாழை வகை சுமார் 20 ஆயிரம் மீன் குஞ்சுகளை கண்மாயில் விடும் நிகழ்ச்சியை ஊராட்சி தலைவர் வேல்மணி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்பாண்டியன், ஊராட்சி துணைத் தலைவர் மச்சக்காளை, வார்டு உறுப்பினர் சவுந்தரபாண்டியன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post ஆண்டிபட்டி அருகே கண்மாய்களில் 20 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடும் பணி: ஊராட்சி தலைவர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Panchayat ,President ,Kanmai ,Andipatti ,Antipatti ,D. Chilukuwarpatti Adi Dravidar Colony ,D. Sedapatti ,D. Rajagopalanpatti ,Dinakaran ,
× RELATED தனியார் தொழிற்சாலை மேற்பார்வையாளரை...