×

குர்பாஸ் அதிரடி சதம்

ஷார்ஜா: யுஏஇ அணியுடனான முதல் டி20 போட்டியில், ஆப்கானிஸ்தான் 72 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஷார்ஜா கிரிக்கெட் அரங்கில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) முதலில் பந்துவீசியது. ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 203 ரன் குவித்தது. ரஹ்மானுல்லா குர்பாஸ் 100 ரன் (52 பந்து, 7 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினார். கேப்டன் இப்ராகிம் ஸத்ரன் 59, உமர்ஸாய் 19* ரன் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய யுஏஇ 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன் மட்டுமே எடுத்து 72 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. விரித்ய அரவிந்த் 70 ரன் (64 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), தனிஷ் சூரி 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆப்கான் பந்துவீச்சில் பரூக்கி 2, நவீன் உல் ஹக், குவாயிஸ் அகமது தலா 1 விக்கெட் வீழ்த்தினர். குர்பாஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆப்கான் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 இன்று இரவு 7.30க்கு தொடங்கி நடைபெறுகிறது.

The post குர்பாஸ் அதிரடி சதம் appeared first on Dinakaran.

Tags : Gurbaz Action Hundred ,Sharjah ,Afghanistan ,T20I ,UAE ,United Arab Emirates ,Sharjah Cricket Stadium ,Gurbaz action ,Dinakaran ,
× RELATED ஷார்ஜாவில் குழந்தைகள் வாசிப்புத் திருவிழா தொடங்கியது..!!