×
Saravana Stores

தெங்கம்புதூரில் ₹28 லட்சத்தில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மையம்

நாகர்கோவில், டிச.31: நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், தெங்கம்புதூர் உரக்கிடங்கு அருகே ₹28 லட்சத்தில், நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை மையம் கட்ட மேயர் மகேஷ் அடிக்கல் நாட்டினார். துணை மேயர்மேரி பிரின்சி லதா, கவுன்சிலர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் ராஜா, திமுக மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர்கள் சேக் மீரான், ஒன்றிய செயலாளர் லிவிங்ஸ்டன், வட்ட செயலாளர்கள் ஜெய கிருஷ்ணன், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து குஞ்சன்விளையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் மேயர் மகேஷ் மனுக்களை வாங்கினார். இதில் ஆணையர் ஆனந்த் மோகன், உதவி ஆணையர் சுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தெங்கம்புதூரில் ₹28 லட்சத்தில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மையம் appeared first on Dinakaran.

Tags : Dengampudur ,Nagercoil ,Mayor ,Mahesh ,Nagercoil Corporation ,Dengampudur Fertilizer ,Deputy ,Princess Lata ,Councilor ,Ramesh ,Health Inspector ,Raja ,DMK ,Tengambudur ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் மாநகராட்சியில் பழைய பொருட்கள் ஏலம் தள்ளிவைப்பு