×

ஆந்திரா, கர்நாடகாவில் 6 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு சித்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சொத்து குவிப்பு வழக்கில் கைது: பல கோடி மதிப்பு ஆவணங்கள், தங்கம் சிக்கியது

திருமலை: சித்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் ரட்டகொண்டா வெங்கட மதுசூதன் என்பவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக விஜயவாடாவில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

அதன்பேரில் நேற்று முன்தினம் மோட்டார் வாகன ஆய்வாளர் ரட்டகொண்டா வெங்கட மதுசூதன் வீடு மற்றும் அவருக்கு ெசாந்தமான 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்டனர். அதன்படி திருப்பதி, மதனப்பள்ளி, பலமநேர், சித்தூர், கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.

இதில் திருப்பதியில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் தலா ஒரு வீட்டுமனை, மதனப்பள்ளியில் 2 அடுக்குமாடி வீடு, புலவண்டலப்பள்ளியில் 1 விருந்தினர் மாளிகை, பலமநேரில் 23 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் வெங்கடமதுசூதன் மனைவி மற்றும் அவரது தந்தையின் பெயரில் 15 வீட்டுமனைகள் மதனப்பள்ளி, திருப்பதி, சித்தூர் மாவட்டம் பலமநேர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருப்பதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இவற்றின் மதிப்பு பல கோடி இருக்கும் என தெரிகிறது. மேலும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 3 கார்கள், ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரிக் பைக், ரூ.5.10 லட்சம், சுமார் ரூ.81 லட்சம் மதிப்புள்ள 2055 கிராம் தங்கம், ரூ.2.4 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப்பொருட்கள், ரூ.26 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப்பொருட்கள், 10 லட்சம் வங்கி கணக்கில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் ரட்டகொண்டா வெங்கட மதுசூதன் சைது செய்யப்பட்டார்.

The post ஆந்திரா, கர்நாடகாவில் 6 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு சித்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சொத்து குவிப்பு வழக்கில் கைது: பல கோடி மதிப்பு ஆவணங்கள், தங்கம் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Andhra, Karnataka Chittoor ,Tirumala ,Chittoor ,Rattakonda Venkata Madhusudhan ,Chittoor district ,Andhra ,Vijayawada ,Dinakaran ,
× RELATED சித்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்