×

ஜேடியு மாஜி தலைவர் கொதிப்பு நிதிஷ்குமாருக்கு எதிராக சதி செய்ததால் பதவி பறிப்பா? மீடியாக்கள் மீது வழக்கு தொடருவேன் என மிரட்டல்

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி திட்டம் தீட்டியதால் ஐக்கிய ஜனதா தள (ஜேடியு) தலைவர் பதவி பறிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது வழக்கு தொடரப்போவதாக லாலன் சிங் கூறி உள்ளார். பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக இருந்தவர் ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங். டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த கட்சி செயற்குழு கூட்டத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து கட்சித் தலைவர் பொறுப்பை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஏற்றுக் கொண்டார். நிதிஷை கவிழ்க்க லாலன் சிங் சதி திட்டம் தீட்டியதாக வெளியான தகவலைத் தொடர்ந்துதான் அவர் பதவி பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து நேற்று விளக்கமளித்த லாலன் சிங், ‘‘கடந்த 20ம் தேதி பீகார் அமைச்சர் ஒருவர் வீட்டில் சில ஜேடியு எம்எல்ஏக்களுடன் நான் ரகசிய கூட்டம் நடத்தியதாக வெளியான மீடியா தகவல் தான் பிரச்னைக்கு காரணம். இது முற்றிலும் தவறானது. எனது பெயருக்கு களங்கம் விளைவிக்க திட்டமிட்டு வெளியிடப்பட்டது. எனக்கும் நிதிஷூக்கும் இடையேயான 37 ஆண்டு கால நட்பை கெடுக்க பார்க்கின்றனர். டெல்லியில் இருந்து திரும்பியதும், எனக்கு எதிராக பொய் செய்தி வெளியிட்ட அனைத்து மீடியாக்கள் மீதும் வழக்கு தொடருவேன் ’’ என்றார்.

The post ஜேடியு மாஜி தலைவர் கொதிப்பு நிதிஷ்குமாருக்கு எதிராக சதி செய்ததால் பதவி பறிப்பா? மீடியாக்கள் மீது வழக்கு தொடருவேன் என மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : JDU ,Koippu ,Nitishkumar ,Lalan Singh ,United Janata Dal ,president ,Bihar ,Chief Minister ,Nitish Kumar ,United Janata Party ,
× RELATED ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு...