×

இலங்கை டி20 அணிக்கு ஹசரங்கா கேப்டன்

கொழும்பு: ஜிம்பாப்வே அணியுடன் டி20 தொடரில் மோதவுள்ள இலங்கை அணியின் கேப்டனாக ஆல் ரவுண்டர் வனிந்து ஹசரங்கா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள ஜிம்பாப்வே அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டிகள் ஜன.6, 8, 11 தேதிகளிலும், டி20 போட்டிகள் ஜன. 14, 16, 18 தேதிகளிலும் நடைபெற உள்ளன. இந்த தொடர்களுக்கான உத்தேச இலங்கை அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டன. ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக குசால் மெண்டிஸ், டி20 போட்டிகளில் கேப்டனாக வனிந்து ஹசரங்கா நியமிக்கப்பட்டுள்ளனர். 2 தொடரிலும் சரித் அசலங்கா துணை கேப்டனாக செயல்பட உள்ளார்.

The post இலங்கை டி20 அணிக்கு ஹசரங்கா கேப்டன் appeared first on Dinakaran.

Tags : Hazaranga ,T20 team ,Colombo ,Vanindu Hazaranga ,Zimbabwe ,T20I ,Sri Lanka ,3 T20Is ,Sri Lanka T20 ,Dinakaran ,
× RELATED சில்லிபாயின்ட்…