×

சில்லிபாயின்ட்…

* சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா (26 வயது, இலங்கை), இடது குதிகால் வலி காரணமாக ஐபிஎல் 2024 தொடரில் இருந்து விலகியுள்ளார். நடப்பு தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் பிசிசிஐ-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி நட்சத்திர வீராங்கனைகள் பிஸ்மா மாரூப், குலாம் பாத்திமா இருவரும் நேற்று முன்தினம் கார் விபத்தில் சிக்கி காயமடைந்தனர். ஸ்கேன் பரிசோதனையில் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என தெரியவந்துள்ளது.

* கஜகஸ்தான் சர்வதேச சேலஞ் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தருண் மன்னெபள்ளி, அனுபமா உபாத்யாயா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளனர். பைனலில் மலேசியாவின் சூங் ஜூ வென்னுடன் மோதிய தருண் 21-10, 21-19 என்ற நேர் செட்களிலும், அனுபமா 21-15, 21-16 என்ற நேர் செட்களில் சக வீராங்கனை இஷாராணி பரூவாவையும் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை முத்தமிட்டனர்.

* ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் டெல்லி, நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த போட்டியில் மோகன் பகான் சூப்பர் ஜயன்ட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் எப்சி அணியை வீழ்த்தியது.

The post சில்லிபாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Vanindu Hazaranga ,Sri Lanka ,IPL 2024 ,Sri Lanka Cricket Board ,BCCI ,Dinakaran ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...