×

அலமாதி அருகே கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது: 5 கிலோ பறிமுதல்

புழல்: அலமாதி அருகே, கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சோழவரம் காவல் எல்லைக்குட்பட்ட நல்லூர், விஜயநல்லூர், அலமாதி, எடப்பாளையம், முந்திரி தோப்பு, காந்திநகர் அம்பேத்கர் நகர், பெருமாள் அடி பாதம், நாகாத்தம்மன் நகர், சோழவரம், காரனோடை, ஆத்தூர், எருமை வெட்டி பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான ஹான்ஸ், குட்கா, கஞ்சா அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக சோழவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சோழவரம் போலீசார் தனிப்படை அமைத்து போதைப்பொருளை ஒழிப்பதற்கு அதிரடி வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில் அலமாதி முந்திரி தோப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக சோதனை செய்ததில் ஐந்து கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதை பதுக்கி வைத்திருந்ததாக அதே பகுதியைச் சேர்ந்த சபரி(22) என்பவரை கைது செய்து சோழவரம் காவல் நிலையம் அழைத்து வந்து கஞ்சா எங்கிருந்து வாங்கி வரப்பட்டது, இதற்கு யார்யார் பின்னணியாக உள்ளனர் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

The post அலமாதி அருகே கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது: 5 கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Alamati ,Nallur ,Vijayanallur ,Alamathi ,Edapalayam ,Mundri Thopp ,Gandhinagar Ambedkar Nagar ,Perumal Adi Padam ,Nagathamman Nagar ,Cholavaram ,Karanodai ,Attur ,Buffalo ,
× RELATED பொன்னமராவதி அருகே ஊராட்சி செயலரை தாக்கியவர் மீது வழக்கு