×

மதுரை பெத்தானியாபுரம் அருகே துப்பாக்கியை சுத்தப்படுத்தும் போது திடீரென வெடித்ததில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.

மதுரை: மதுரை பெத்தானியாபுரம் அருகே துப்பாக்கியை சுத்தப்படுத்தும் போது திடீரென வெடித்ததில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராஜேந்திரன் தனியார் வங்கியில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார். துப்பாக்கியை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக சுத்தம் செய்த போது எதிர்பாராத விதமாக ராஜேந்திரன் சுட்டுக் கொண்டார். வயிற்று பகுதியில் பாய்ந்த குண்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது.

விபத்தா? தற்கொலையா? என்ற கோணத்தில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை பெத்தானியாபுரம் தாமஸ் விதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவர் முன்னாள் ராணுவ வீரராவார். ராணுவத்தில் 23 வருடமாக பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது ஓய்வு பெற்று தனியார் வங்கியில் காவலராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் தனியார் வங்கியில் கடந்த 20 நாட்களாக வேலைக்கு செல்லாத நிலையில் அவர் வைத்திருந்த துப்பாக்கியை காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக இன்று காலை தனது வீட்டு மொட்டைமாடியில் துப்பாக்கியை சுத்தம் செய்ய முயற்சித்தபோது, தவறுதலாக அவருடைய கைப்பட்டு அவருடைய வயிற்று பகுதியை நோக்கி சுற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்தத்தை அறிந்து அவருடைய குடும்பத்தார் ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள், வழியில் சென்றுகொண்டிருக்கும்போதே அவர் உயிரிழந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

The post மதுரை பெத்தானியாபுரம் அருகே துப்பாக்கியை சுத்தப்படுத்தும் போது திடீரென வெடித்ததில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். appeared first on Dinakaran.

Tags : Bethanypuram, Madurai ,Madurai ,Rajendran ,Bethaniapuram, Madurai ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...