×

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை உறவின்முறை ஆலோசனை கூட்டம்

 

தஞ்சாவூர், டிச.30: தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை உறவின்முறை சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர்- நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு ஓய்வுப் பெற்ற வங்கி மேலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தவ.கணேசன், ஆசிரியர் பாலையன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் ரெங்கராஜன் வரவேற்றார்.

கூட்டத்தில், தஞ்சாவூர் -நாஞ்சிக்கோட்டை சாலை உறவின்முறை சங்கம் என்ற ஒரு புதிய அமைப்பை வருகிற (2024ம் ஆண்டு) ஜனவரி மாதம் முதல் தோற்றுவிப்பது. சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு தருவது. புதிய உறுப்பினர்களை இணைப்பது. பிரதிமாதம் சங்க கூட்டங்கள் நடத்துவது. முதல் வைப்புத் தொகை மற்றும் மாதந்தோறும் சேமிப்பு தொகை செலுத்துவது உள்ளிட்ட சமூக வளர்ச்சிக்கான பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. சீனியர் வழக்கறிஞர் காசி. ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

The post தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை உறவின்முறை ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur Nanchikottai ,Relations ,Thanjavur ,Thanjavur Nanchikottai Road Relations Association Advisory ,Jayaraman ,Thanjavur-Nanchikottai ,Headmaster ,Rev. ,Ganesan ,Nanchikottai ,Dinakaran ,
× RELATED செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில்...