×

3 லாட்ஜ்களில் தீவிரவாதிகள் தங்கி இருப்பதாக புரளி

மேட்டுப்பாளையம், டிச.30: கடந்த டிசம்பர் 28ம் தேதி அவசர போலீஸ் எண் 100க்கு மர்ம நபர் ஒருவர் செல்போனில் அழைத்து மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் மூன்று லாட்ஜ்களில் தீவிரவாதிகள் தங்கி இருப்பதாக தகவல் அளித்து விட்டு போனை இணைப்பு துண்டித்துள்ளார்.

இதனையடுத்து, காவல் ஆய்வாளர்கள் நவ நீதகிருஷ்ணன், நித்யா தலைமையிலான போலீசார் மர்ம நபர் தெரிவித்த தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட மூன்று லாட்ஜ்களிலும் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இதில், மர்ம நபர் தெரிவித்த தகவல் புரளி என்பது தெரிய வந்தது. இந்நிலையில், அவசர போலீஸ் எண் 100க்கு அழைத்த நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் மேட்டுப்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த சிற்றரசு என்பவரது மகன் அறிவுடை நம்பி (51) என்பதும், அரசு பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மேட்டுப்பாளையம் போலீசார் அவர் மீது பொய்யான தகவலை பரப்பி பொது மக்களிடையே பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியதாக வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

The post 3 லாட்ஜ்களில் தீவிரவாதிகள் தங்கி இருப்பதாக புரளி appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...