×

ஈரோடு மாநகராட்சி ஜவுளி வணிக வளாகத்தில் 64 கடைகள் ஏலம்

 

ஈரோடு,டிச.30: ஈரோடு மாநகராட்சி கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் உள்ள 233 கடைகளுக்கான பொது ஏலத்தில், 64 கடைகள் மட்டுமே ஏலம் போனது.  ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே மாநகராட்சிக்கு சொந்தமான அப்துல்கனி ஜவுளி மார்க்கெட் வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.51.59 கோடி மதிப்பீட்டில் 3 தளங்களுடன் கடைகள் கட்டப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் 113 கடைகள் ஒதுக்கப்பட்டது.

மீதமுள்ள 233 கடைகளுக்கான ஏலம் ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் நேற்று மாநகராட்சியில் நடைபெற்றது. மாநகராட்சி நிர்ணயித்த குறைந்தபட்ச தொகையை விட கூடுதலாக வாடகை கோரியிருந்த 64 பேருக்கு கடைகள் ஏலம் விடப்பட்டன. மீதமுள்ள 169 கடைகளுக்கு யாரும் ஏலம் கோரி விண்ணப்பிக்காததால்,அந்தக் கடைகளுக்கு ஏலம் நடைபெறவில்லை. இந்த கடைகளுக்கு, மீண்டும் ஏலம் அறிவிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

The post ஈரோடு மாநகராட்சி ஜவுளி வணிக வளாகத்தில் 64 கடைகள் ஏலம் appeared first on Dinakaran.

Tags : Erode Corporation ,Erode ,Kani Market ,Abdulkani Textile Market Complex ,Panneerselvam Park ,Erode Corporation Textile Market Complex ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாநகராட்சியில் வரிவசூல் பணி தீவிரம்