×

இன்ஸ்டாவில் அமித்ஷாவை பின் தொடர்வோர் 1 கோடியை கடந்தது

புதுடெல்லி: இன்ஸ்டாகிராமில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது.இதுகுறித்து பாஜ வட்டாரங்கள் கூறுகையில், இந்தியாவின் பழமையான குற்றவியல் சட்டங்களை நீக்கி 3 புதிய குற்றவியல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் அரசு நிறைவேற்றிய பின்னர் அமித்ஷாவை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக அமித் ஷாவுக்குதான் சமூக வலைதளங்களில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. டிவிட்டரில் 3.4 கோடி பேர், இன்ஸ்டாகிராமில் ஒரு கோடியே 7 லட்சம், பேஸ்புக்கில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் அவரை பின் தொடர்கின்றனர்.

The post இன்ஸ்டாவில் அமித்ஷாவை பின் தொடர்வோர் 1 கோடியை கடந்தது appeared first on Dinakaran.

Tags : Amitsha ,New Delhi ,Union Minister ,Amit Shah ,Bajataras ,Amitshah ,India ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்...