×

ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளை ‘வறுமை ஒழிப்பு தினமாக’ கடைபிடித்து வந்தார் கேப்டன் விஜயகாந்த்!!

சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவரது பிறந்தநாளை ‘வறுமை ஒழிப்பு தினமாக’ கடைபிடித்து வந்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று (டிச.28) காலை காலமானார். அவரது மறைவையடுத்து அவரது உடல் சென்னை தீவுத் திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் பல்வேறு பிரபலங்களும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இதைத் தொடர்ந்து விஜயகாந்த் அவர்களின் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 25ஐ ‘வறுமை ஒழிப்பு தினமாக’ கேப்டன் விஜயகாந்த் கடைபிடித்து விஜயகாந்த் கடைபிடித்து வந்தார். கடந்த 2006-ம் ஆண்டு முதல் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் ‘வறுமை ஒழிப்பு தினமாக’ கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், அன்றைய தினம் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அவர்களால் முடிந்த அளவுக்கு மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை செய்வர். கடந்த காலங்களில் இலவச வீட்டு மனை நிலங்கள், இலவச திருமணம், பெண் குழந்தைகள் வைப்பு நிதி, இலவச கணினி பயிற்சி மையம் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகள் செய்யப்பட்டன.

மேலும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் வழங்குவதுபோல, மதிய உணவு மற்றும் நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களின் வறுமையை ஒழிக்கும் முயற்சியில் தேமுதிக தொடர்ந்து பாடுபட்டு வருவதாகவும் வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே தனது குறிக்கோள் ஆகும் என்றும் விஜயகாந்த் கூறியது நினைவுகூறத்தக்கது.

The post ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளை ‘வறுமை ஒழிப்பு தினமாக’ கடைபிடித்து வந்தார் கேப்டன் விஜயகாந்த்!! appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Poverty Eradication Day ,CHENNAI ,DMV ,DMDK ,Chennai Island Cemetery ,
× RELATED சென்னையில் பயங்கரம்!: கள்ளக்காதலுக்கு...