×

அரசியலில் விஜயகாந்த் போல மனிதநேயம் கொண்ட ஒரு தலைவரை பார்ப்பது அரிது :ஓன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழஞ்சலி

சென்னை :தன் பணத்தால் மக்களுக்கு உதவக்கூடிய நல்ல தலைவரை நாம் இழந்துவிட்டோம் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று (டிச.28) காலை காலமானார். இதையடுத்து பொதுமக்கள், பிரபலங்கள் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. பகல் 1 மணிக்கு பிறகு விஜயகாந்தின் உடல் கோயம்பேடு அலுவலகம் கொண்டு செல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து விஜயகாந்தின் உடல் இன்று மாலை அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் ஆண்டனி, அருள்நிதி,ஸ்ரீகாந்த், லிவிங்ஸ்டன், ராம்கி, ராதாரவி, சாந்தனு, வாகை சந்திரசேகர், டெல்லி கணேஷ்,எம்.எஸ்.பாஸ்கர், தாமு, இசையமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, இயக்குனர்கள் மிஷ்கின், பாக்யராஜ், சுந்தர் சி, பார்த்திபன், அரசியல் தலைவர்கள் ஓபிஎஸ், சீமான், ஜி.கே.வாசன், மேயர் பிரியா, அமைச்சர் ரகுபதி, நடிகை குஷ்பூ உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விஜயகாந்த் உடலுக்கு மலர்வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் ஆகியோருக்கு நிர்மலா சீதாராமன் ஆறுதல் கூறினார். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிர்மலா சீதாராமன்,”ஒன்றிய அரசின் சார்பாக பிரதமர் மோடி என்னை அனுப்பிவைத்தார். கஷ்டங்களை பார்க்க முடியாத அளவுக்கு இளகிய மனம் கொண்டவர் விஜயகாந்த். விஜயகாந்த் வீட்டிற்கு சென்றவர் உணவருந்தாமல் திரும்ப முடியாது. அனைவரின் கஷ்டங்களையும் உணர்ந்து அவர்களுக்கு மரியாதை கொடுத்தவர் விஜயகாந்த். அரசியலில் விஜயகாந்த் போல மனிதநேயம் கொண்ட ஒரு தலைவரை பார்ப்பது அரிது. தன் பணத்தால் மக்களுக்கு உதவக்கூடிய நல்ல தலைவரை நாம் இழந்துவிட்டோம்,”எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “2014 தேர்தலில் மோடி பிரதமராக கடினமாக உழைத்தவர் விஜயகாந்த். பிரதமர் மோடிக்கும் விஜயகாந்துக்கும் இடையே நல்லுறவு இருந்தது. தேமுதிகவை வெற்றிகரமாக பிரேமலதா நடத்திச் செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது” இவ்வாறு தெரிவித்தார்.

The post அரசியலில் விஜயகாந்த் போல மனிதநேயம் கொண்ட ஒரு தலைவரை பார்ப்பது அரிது :ஓன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Former ,Finance Minister ,Nirmala Sitharaman Pugajanjali ,Chennai ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,DMDK ,Nirmala Sitharaman Pujajanjali ,Dinakaran ,
× RELATED மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு...