×

வருசநாடு அருகே மலைக்கிராமத்திற்கு தார்ச்சாலை அவசியம்: பொதுமக்கள் கோரிக்கை

 

வருசநாடு, டிச. 29: வருசநாடு அருகே மஞ்சனூத்து மலை கிராமம் உள்ளது. இந்த மலைக் கிராமத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இங்கு கடந்த 70 ஆண்டுகாலமாக தார்ச்சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு கிராமத்திற்கு நடந்து செல்கின்றனர். மேலும் இப்பகுதியில் விளைகின்ற விவசாய விளைபொருட்களை தலைச்சுமையாக அல்லது கட்டவண்டி, டிராக்டர் மூலமும் கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது.

அதுபோல், ரேஷன் பொருட்கள், வீட்டு சாமான்கள் வாங்க 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, குமணன்தொழு உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வருசநாடு அருகே மலைக்கிராமத்திற்கு தார்ச்சாலை அவசியம்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tarchal ,Varusanadu ,Manchanoothu ,tarchala ,
× RELATED கடமலை அருகே கிணறு பைப்லைனை சேதப்படுத்திய யானைகள்