×

வேலாயுதம்பாளையம் அருகே புகளூர் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பா?

வேலாயுதம்பாளையம், டிச.29: கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் செயல்பட்டு வரும் காகித ஆலையின் கழிவு நீரால் புஞ்சை தோட்டக்குறிச்சி பகுதியில் பல ஏக்கர் விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பாதிப்பு கரூர் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்தார். கரூர் மாவட்டம் புகளூர் பகுதியில் இயங்கி வரும் காகித ஆலை நிறுவனத்தில் இருந்து வெளிவரும் கழிவுநீர் புஞ்சை தோட்டக்குறிச்சி பகுதி வழியாகச் சென்று புகளூர் வாய்க்காலில் கலக்கிறது. இதனால் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளான மூர்த்தி பாளையம், ஒரத்தை, அம்மாபட்டி, மலையம்பாளையம் ஆகிய ஊர்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றன. காகித ஆலையின் கழிவு நீரானது இங்குள்ள ஓடையில் கலப்பதால் இவ்வூரில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலம் மற்றும் நீரில் உப்புத்தன்மை அதிகரித்து விவசாயம் செய்யும் தன்மை குறைந்து வருகிறது.

மேலும் இங்குள்ள மக்களுக்கு அடிக்கடி உடல் நலக்கோளாறு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் கரூர் ஆர்டிஓ ரூபினா தலைமையில் புகளூர் தாசில்தார் முருகன் மற்றும் வருவாய்த் துறையினர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது அங்குள்ள கிணறு, நீர்ஓடை, குளம் ஆகியவற்றிலிருந்து நீர் மாதிரிகள் எடுத்து சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. பின்னர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின் அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ ரூபினாவிடம் உறுதி அளித்தார்.

The post வேலாயுதம்பாளையம் அருகே புகளூர் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பா? appeared first on Dinakaran.

Tags : Buklur ,Velayuthampalayam ,Karur Kotaksar ,Punchai Thotakurichi ,Bukulur Kapapuram ,Karur district ,Dinakaran ,
× RELATED புகழிமலை பாலசுப்பிரமணிய கோயிலில் திரளான பக்தர்கள் கிரிவலம்